எலன் மஸ்க்கையே தனது டெக்னாலஜியால் ட்விட்டரில் மிரளவைத்த 19 வயது மாணவர்! https://ift.tt/3KPwbO9

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தின் நகர்வுகளைக் கண்காணிக்கும் @ElonJet என்ற ட்விட்டர் கணக்கை நீக்க 19 வயதான கல்லூரி மாணவருக்கு 5,000 டாலர் வழங்கியுள்ள சமபவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


"Elon Musk's Jet" என்ற ட்விட்டர் கணக்கு, பொதுவில் கிடைக்கும் விமானப் போக்குவரத்துத் தரவைக் கண்காணிக்கும் போட்களைப் பயன்படுத்தி, எலன் மஸ்க்கின் தனிப்பட்ட ஜெட் விமானத்தின் இயக்கங்களைக் காட்டி வந்தது. இது தொடர்பாக, தனது தனிப்பட்ட ஜெட் விமானத்தைக் கண்காணிக்கும் ட்விட்டர் கணக்கின் உரிமையாளரான மாணவர் ஜாக் ஸ்வீனிக்கு செய்தி அனுப்பிய எலன் மஸ்க், "இதை நீங்கள் அகற்ற முடியுமா? இது ஒரு பாதுகாப்பு ஆபத்து" என்று கேட்டார்.

image
முதலில் மாணவர் $50,000 கோரியதாகவும், மஸ்க் அதைப் பற்றி யோசிப்பதாகவும் கூறினார். முன்னும் பின்னுமாக சில செய்தி உரையாடல்களுக்குப் பிறகு மஸ்க், ஸ்வீனிக்கு $5,000 வழங்கியுள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3Hbpmoa

Comments