பட்ஜெட்: மின்னணு வாகனங்களுக்கான நிலையான கொள்கை முடிவுகளை எதிர்பார்க்கும் ஆட்டோமொபைல் துறை https://ift.tt/AtXzMDQml
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், மின்னணு வாகனங்களுக்கான நிலையான மற்றும் நீண்டகால கொள்கை முடிவுகளை எதிர்பார்த்தும் ஆட்டோமொபைல் துறையினர் இந்த பட்ஜெட்டில் காத்திருக்கின்றனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறை 7.5% பங்கை கொடுக்கிறது. அதில் தொழில்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிக்கும் அதிகமாக ஆட்டோமொபைல் துறை மூலமே உற்பத்தி நடைபெறுகிறது. இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னையில் இந்தியாவில் மொத்த கார் உற்பத்தியில் 30 முதல் 40 சதவீதம் நடைபெறுகிறது. இந்நிலையில் 2018-2019ம் நிதி ஆண்டில் BS6 வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கான சலுகைகள் வழங்கப்பட்டன.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் 2020 ஆம் ஆண்டில் மின்னணு வாகன உற்பத்திக்கு சலுகைகள் மற்றும் வாகன உற்பத்தியை உள்நாட்டிலேயே மேற்கொள்ள தேவையான ஊக்கம் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது. உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை கிடுகிடுக்க வைத்தது. குறிப்பாக இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பல கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது, கடந்த ஆண்டில் உலக அளவில் ஏற்பட்ட செமிகண்டக்டர் பொருட்களின் பற்றாக்குறையால் பல நிறுவனங்கள் கார் உற்பத்தியை கணிசமாகக் குறைந்தன. அதுபோக கார் உதிரி பாகங்கள் நுகர்வு தேவையும், விலையும் அதிகரித்ததால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல பெரும் லாபம் பார்க்காமல் செயல்படும் நிலை ஏற்பட்டது.
மின்னணு வாகனங்கள் உற்பத்தியை பெருக்குவதற்கு அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், அதற்கான மூலப் பொருட்களான பேட்டரி, சார்ஜிங் ஸ்டேஷன், செமிகண்டக்டர் போன்றவற்றின் உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கு முதலீடு செய்ய வேண்டும் என தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் 13.6 லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்கள் ஈடுபடும் நிலையில் முதலீடுகளுக்கு சாதகமான இடமாக இந்தியாவை மாற்றும் வகையில், நிலையான நீண்ட கால வரிக் கொள்கையை உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2sEn5FgfJ
Comments
Post a Comment