ஷியாம் சிங்கா ராய்: வைரலாகும் சாய் பல்லவியின் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோ! https://ift.tt/eA8V8J
பிரேமம், மாரி 2, NGK, ஃபிடா, லவ் ஸ்டோரி போன்ற பல படங்களில் நடித்த பிரபல நடிகரான சாய்பல்லவி அண்மையில் தெலுங்கு படமான 'ஷியாம் சிங்கா ராய்' எனும் படத்தில் ரோஸி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த வருடம் டிசம்பர் 24-ல் வெளியானது. நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்கியிருந்தார். இதில் இடம்பெற்ற 'ரோஸி' எனும் கதாபாத்திரம் ஒரு தேவதாசியின் வாழ்க்கையை பிரதிபலித்தது. இதில் மிகச்சிறந்த நடிப்பை சாய்பல்லவி வழங்கியிருந்தார். படம் சமீபத்தில் ஓடிடி-யில் வெளியானதைத் தொடர்ந்து சாய்பல்லவியின் ரோஸி என்னும் இக்கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வைரலாகி வருகிறது. படம் வெளியாகி ஒரு மாதமான நிலையில் அதைக் கொண்டாடும் வகையில் சாய்பல்லவி படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ரோஸி கதாபாத்திரத்தின் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
சாய்பல்லவி பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவில் "படத்தின் வெற்றிக்கு நன்றி மட்டுமே கூறிவிட முடியாது" என்றும், தான் நடனமாடிய மற்றுமொரு காணொலியைப் பகிர்ந்து "அற்புதமான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி" என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் "பிரனவலயாவில் நடத்திய நடனத்தையும் அங்கு அனுபவித்த உணர்வுகளையும் ஒருபோதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்றும் குறிப்பிட்டு ஷியாம் சிங்கா ராய் படம் குறித்தான அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார் சாய்பல்லவி.
from தமிழ் சினிமா https://ift.tt/3u8MEHg
https://ift.tt/3trcPsH
Comments
Post a Comment