சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட சிலைகளின் முப்பரிமாண புகைப்படங்கள் அடங்கிய மெய்நிகர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் இதுவரை 36 உலோக சிலைகள், 265 கற்சிலைகள், 73 மரச்சிலைகள் உட்பட 374 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுப்படி அச்சிலைகள் அருங்காட்சியகத்திலும், சிறப்பு மையங்களிலும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மீட்கப்பட்ட சிலைகளின் முப்பரிமாண புகைப்படங்கள் அடங்கிய இணையவழி மெய்நிகர் அருங்காட்சியகத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தொடங்கியுள்ளனர்.
இதில் முதற்கட்டமாக 108 சிலைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் மூலம் கிடைக்கும் பழங்கால சிலைகளின் புகைப்படங்கள் மற்றும் தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, அதனை முப்பரிமாண புகைப்படமாக மாற்றி, இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டின் பழங்கால கோவில்கள் மற்றும் பொக்கிஷங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள முடியும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
www.tnidols.com - என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் இந்த மெய்நிகர் அருங்காட்சியகத்தை கண்டு களிக்கலாம்.
சமீபத்திய செய்தி: திடீரென உயிரிழந்த தாய் ! மீளா துயரில் தவிக்கும் உக்ரைன் வாழ் தமிழக மாணவர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/DRgBVtQ
Comments
Post a Comment