ஊடகங்களின் விளம்பர வருமானத்திற்கு செக்! ரஷ்யாவுக்கு எதிராக களத்தில் குதித்த கூகுள் https://ift.tt/J3iwMyA
உக்ரைன் நாட்டோடு கடந்த வியாழன் முதல் யுத்தம் செய்து வருகிறது ரஷ்யா. இந்த போரில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. உலக நாடுகள் ரஷ்யாவின் இந்த போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. தற்போது சில நாடுகள் உக்ரைனுக்கு தங்கள் நாட்டின் சார்பில் ஆயுதங்களையும் கொடுத்து உதவியுள்ளன. அதே நேரத்தில் இரு நாடுகளும் பெலாரஸ் எல்லையில் யுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலையில், ரஷ்ய நாட்டின் அரசு ஊடகங்களின் கூகுள் தள ஹேண்டில்கள் மூலம் கிடைக்கும் விளம்பரம் சார்ந்த வருவாயை ஈட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில கட்டுப்பாடுகளை அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கூகுள் நிறுவனம் விதித்துள்ளதாக உறுதியாகியுள்ளது. மெட்டா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே நடவடிக்கையை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கூகுளின் இந்த நடவடிக்கையினால் யூடியூப் தளங்களில் ஒளிபரப்பாகும் வீடியோக்களுக்கு இடியே பிளே ஆகும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் ரஷ்ய அரசு சார்பு ஊடகங்களுக்கு தடை பட்டுள்ளது. மேலும் இந்த யுத்தத்தை தங்கள் தரப்பு கூர்ந்து கவனித்து வருவதாகவும். அதை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனவும் கூகுள் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/cL8NSkq
Comments
Post a Comment