'வசீகரர்' கௌதம் வாசுதேவ் மேனன் படங்களின் சுவாரஸ்யமான தகவல்கள்! Special Photo Album #HappyBirthdayGVM https://ift.tt/UTb6OWu

கௌதம் வாசுதேவ் மேனன் பிப்ரவரி 25, 1973இல் பாலக்காட்டில் பிறந்தார். அப்பா மலையாளி. அம்மா தமிழர்.

வளர்ந்தது சென்னை அண்ணா நகர். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்து விட்டு ட்ரெயின் ஏறி புதுக்கோட்டை மூகாம்பிகை கல்லூரியில் மெக்கானிக் இன்ஜினியரிங் முடித்தார்.

நாயகன், Dead poet society போன்ற படங்களில் ஈர்க்கப்பட்டு பெற்றோரிடம் தன் இயக்குனராகும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். அம்மா இவருக்கு சப்போர்ட்.

முதலில் சில விளம்பரங்களை இயக்கி விட்டு ராஜிவ் மேனனிடம் 'மின்சார கனவு' படத்தில் உதவி இயக்குநராக சேர்கிறார்.

`மின்சார கனவு' படத்தில் பிரபு தேவா தற்கொலை செய்யப் போகும் பெண்ணைக் காப்பற்றும் காட்சி ஒன்று இருக்கும். அரவிந்த்சாமி கீழே இருந்து பார்ப்பார். அந்த பிரேமில், கூட்டத்தில் ஒருவராக ஜிவிஎம் நிற்பார்.

வேறு ஒரு பெயரில் எடுக்கப்பட்டு பின் 'மின்னலே' என்று பெயர் மாற்றப்பட்ட இவரின் முதல் படம் 2001 இல் வெளியானது. படத்தில் மாதவன் -ரீமா சென் காதல் காட்சிகள் கவித்துவமாக இருந்தது என பலரால் பாராட்டப்பட்டது.

ஹாரிஸ் உதயமானதும் மின்னலே படத்தில் தான். 'வசீகரா' என பாம்பே ஜெயஸ்ரீ குரலில், தாமரை வரிகளில் 2000க்கு பிறகு வந்த காதலர்களை வசீகரித்தது. அந்தப் படத்தின் ஆல்பமே ஹிட்டானது.

'காக்க காக்க' படம் கௌதமின் முதல் காப் ஸ்டோரி. `வேட்டையாடு விளையாட்டு', `என்னை அறிந்தால்' எனத் தொடரும் அவரின் ஸ்டைலிஷ் காப் படங்களுக்கு இது தான் ஆரம்பம்.

காதலை அதன் எக்ஸ்ட்ரீம்க்கு கொண்டு சென்ற படம் விண்ணைத் தாண்டி வருவாயா. ஜெஸியும் கார்த்திக்கும் ரசிகர்களின் பேவரைட்டாக மாறிப் போயினர்.

திகட்டாத காதல் காட்சிகள் ஜிவிஎம்மின் ஸ்டைல். வாரணம் ஆயிரத்தில் மாலினி, மேக்னா, பிரியா என மூன்று கதாநாயாகிகளைக் காட்சிகளில் மிளிரச் செய்தார்.

'வாழ்க்கைக்கான ஒரு பயணம்' ஜெஸி-கார்த்திக் ட்ரெயினில் செல்வதாக இருக்கட்டும், தள்ளிப்போகாதே சிம்பு-மஞ்சிமா பைக்கில் செல்வதாக இருக்கட்டும் பயணத்திற்கும் காதலுக்கும் உறவைச் சொன்னார்.

50 சதவிகிதம் ஸ்க்ரிப்ட் ரெடியாயிருந்தா உடனே ஷூட்டிங் கிளம்பிடுவார் ஜிவிஎம். `காக்க காக்க' கிளைமாக்ஸ் இல்லாம சொன்னதால் தான் விஜய் அந்தப் படத்தில் நடிக்க சம்மதிக்கவில்லையாம்.

அமிதாப், ரஜினி கூட ஒர்க் பண்ணனும் என்பதே ஜிவிஎம்மின் விருப்பம். டைரக்டர் என்பதில் இருந்து இப்போ நடிகராக மாறியிருக்கிறார்.

அவரின் கதாநாயகர்கள் போலவே நீல நிற டெனிம் சர்ட்டில் கடாவை முறுக்கி கொண்டு ஸ்டைலாக வரும் ஜிவிஎம் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட். பிறந்தநாள் வாழ்த்துகள் சார்!
from தமிழ் சினிமா https://ift.tt/QFZM6b3
https://ift.tt/PbnQz4c
Comments
Post a Comment