பா.இரஞ்சித் தயாரிக்கும் புதிய படம் இதுதான்; இவர்கள் 3 பேர்தான் லீட் ரோல்! | Vikatan Exclusive https://ift.tt/ynXrR5A
'குதிரைவால்' படத்திற்கு பிறகு பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் அடுத்து தயாரிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது. இது குறித்து இரஞ்சித் வட்டாரத்தில் விசாரித்தேன். 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'குதிரைவால்' படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக 'ஜெ.பேபி' வெளிவர உள்ளது.

ஊர்வசி, 'அட்டகத்தி' தினேஷ், 'டிக்கிலோனா' மாறன் ஆகியோர் முக்கிய கதபாத்திரங்களாக நடிக்க படத்துக்கு 'ஜெ.பேபி' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நகைச்சுவை மிளிரும் உணர்வுப்பூர்வமான குடும்பக்கதை இது என்கின்றனர். வெங்கட் பிரபு, பா.இரஞ்சித் ஆகியோரிடம் பணிபுரிந்த சுரேஷ் மாரி இப்படத்தை இயக்கியுள்ளார். சென்னை மற்றும் கொல்கத்தாவில் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளதாம். இந்தப் படம் ஊர்வசி மற்றும் மாறன் இருவரின் கரியரிலும் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். அதிலும் காமெடியனாகவே பார்த்து பழக்கப்பட்ட மாறன் இதில், அழுத்தமான கதாபாத்திரமாம். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கியிருக்கிறது.
from தமிழ் சினிமா https://ift.tt/NlKBeQ6
https://ift.tt/NIvrgCc
Comments
Post a Comment