விஜய் 66 அப்டேட்: ராஷ்மிகா, கீர்த்தி சனோன், திஷா பதானி... வம்சி இயக்கும் படத்தின் நாயகி யார்? https://ift.tt/H561hYD

விஜய்யின் ரசிகர்கள் குஷியில் திளைக்கிறார்கள். 'பீஸ்ட்' டீசர் வெளிவரும் சந்தோஷம் ஒரு புறம், விஜய் 66 படம் துவங்கப்போகிறது என்ற செய்தி இன்னொரு புறம்.

தமிழில் கார்த்தி நடித்த 'தோழா' படத்தை இயக்கிய வம்சி இப்போது 'விஜய்-66' படத்தை இயக்குகிறார். இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து இயக்கி வரும் படத்தின் தயாரிப்பாளரான தில்ராஜு, 'விஜய் 66'ஐயும் தயாரித்து வருகிறார்.

இயக்குநர் வம்சி, தில் ராஜூ, விஜய்

சமீபகாலமாக விஜய் படத்தின் இயக்குநர்கள், ஹீரோயின்கள் விஷயத்தில் கிரியேட்டிவ்வாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். விஜய்யுடன் இதுவரை ஜோடி சேராத ஹீரோயின்கள் யாரென பட்டியலிட்டு, அதனை ஒரு டீமாக விவாதித்து அதன் பின் விஜய் டிக் அடிப்பவர்களுக்கு வாய்ப்புகள் அமைந்து வருகின்றன.

விஜய் 66 படத்தை இந்தியிலும் டப் செய்து வெளியிடும் ஐடியாவில் உள்ளதால், பாலிவுட் ஹீரோயின்களைக் களம் இறக்க திட்டமிட்டனர். 'புஷ்பா'வுக்கு பிறகு ராஷ்மிகா மந்தனா இந்தியிலும் தூள்கிளப்பி வருகிறார். ஆனால் 'புஷ்பா 2' மற்றும் ஏற்கெனவே கமிட்டான இந்தி படங்களின் படப்பிடிப்புகள் இருப்பதால், ராஷ்மிகாவால் விஜய் படத்திற்குத் தேதிகள் ஒதுக்க முடியாமல் போனதாக அவரது வட்டாரம் தெரிவிக்கிறது.

விஜய், தமன்

'விஜய்-66'ல் டபுள் ரோலில் நடிக்கிறார் விஜய். இரண்டு விஜய் என்பதால், படத்தில் டபுள் ஹீரோயின்கள். கீர்த்தி சனோன், திஷா பதானி இருவரும் நடிக்க உள்ளதாக படக்குழுவில் இருந்து தகவல்கள் வந்திருக்கின்றன. வருகிற ஏப்ரல் 6-ம் தேதி சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் ('பீஸ்ட்'டும் இங்கு தான் படமாக்கப்பட்டது) படப்பிடிப்பு துவங்க உள்ளது. இங்கே பிரமாண்டமான வீடு செட் ஒன்றை அமைத்து வருகின்றனார். அதாவது 'தோழா' படத்தின் கதை நாகார்ஜூனாவின் வீட்டுக்குள்ளேயே நடப்பதை போல, இதிலும் ஒரு பங்களா இடம் பெறுகிறதாம். விவேக் ஓபராய், பிரகாஷ்ராஜ் என நடிப்பு புலிகள் பலரும் படத்தில் உள்ளனர். இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ராமோஜிராவில் இருக்கலாம் என்கிறார்கள். இது தவிர, பாரீஸும் செல்லவிருக்கிறார்களாம்.



from தமிழ் சினிமா https://ift.tt/RIovc1J
https://ift.tt/Q0mM6XN

Comments