‘வேவ் லைட்’ ஸ்மார்ட் வாட்ச்சை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது போட் நிறுவனம்! https://ift.tt/5svDKCr

இந்தியாவில் ‘வேவ் லைட்’ ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது போட் (Boat)  நிறுவனம். பட்ஜெட் விலை செக்மென்டில் அறிமுகமாகியுள்ளது. 1.69 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ள இந்த வாட்ச்சில் பல்வேறு விதமான ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளது. சதுர வடிவிலான இந்த வாட்ச்சில் 100 விதமான வாட்ச் ஃபேஸ் உள்ளது. 

ஒரு வார காலம் இந்த வாட்ச்சின் பேட்டரி திறன் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்ட் ரேட் மானிட்டரிங், SpO2 டிரேக்கிங் மாதிரியானவை உள்ளது. கால்பந்து, யோகா, சைக்கிளிங், வாக்கிங், பேட்மிண்டன், ஜாகிங், பாஸ்கெட் பால், ஸ்கிப்பிங், கிளைம்பிங் மற்றும் நீச்சல் மாதிரியான விளையாட்டுகளை இந்த வாட்ச் டிராக் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வாட்ச் மூலம் போனில் வரும் நோட்டிபிகேஷனை பயனர்கள் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போனின் கேமரா மற்றும் மியூசிக் பிளேலிஸ்ட்டை கன்ட்ரோல் செய்யும் வசதியும் இதில் உள்ளது. கூகுள் ஃபிட் அப்ளிகேஷன் சப்போர்டும் இதில் உள்ளது. மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த வாட்ச்சை அமேசான் மூலம் நாளை முதல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 1999 ரூபாயாகும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/jz31I8L

Comments