கிரிப்டோகரன்சிகளான பிட்காயின் மற்றும் எத்திரியம் விலைகள் சரிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை காயின்டெஸ்க் (Coindesk) நிறுவனம் தெரிவித்துள்ளது. பிட்காயினின் விலை 1 சதவீதமும், எத்திரியம் விலை 0.40 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தெரிகிறது. இதே போல XRP, Terra மாதிரியான கிரிப்டோகரன்சி விலைகளும் சரிந்துள்ளது.
மறுபக்கம் சோலானா, கார்டானோ, அவலாஞ்சி, போல்கடோட், ஸ்டெல்லர், டோக்காயின், ஷிபா மாதிரியான காயின்களின் விலை உயர்ந்துள்ளது. பிட்காயின் 47,084.14 அமெரிக்க டாலரும், எத்திரியம் 3,397.27 அமெரிக்க டாலர் மதிப்பும் கொண்டுள்ளது.
கிரிப்டோகரன்சி?
“கணினியில் உள்ள மென்பொருளை பயன்படுத்தி, அல்காரிதம் மூலமாக கணக்குகளை என்க்ரிப்ட் செய்து, சில புரோகிராம்கள் வடிவமைத்து, இதை உருவாக்குவதால் கிரிப்டோ கரன்சினு பெயர் வந்திருக்கு.
ரூபாய், டாலர், யூரோ என வெவ்வேறு நாடுகளின் கரன்சிகளை அடையாளப்படுத்துவது போல பிட் காயின், நேம் காயின், ஸ்விப்ட் காயின் என பல்வேறு பெயர்களில் கிரிப்டோ கரன்சிகள் வெளியாகி வருகின்றன.
உலகின் எந்த பகுதியில் யார் வேண்டுமானாலும் இதை வாங்கலாம், விற்பனை செய்யலாம்” என விளக்கம் கொடுத்துள்ளார் நிதித்துறை ஆலோசகர் தமிழ்வாணன்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/90ucjJy
Comments
Post a Comment