`அவர் விஜய் ரசிகர்தான்!'; KGF இயக்குநர் பிரசாந்த் நீல்லின் பதிலுக்கு நெட்டிசன்களின் கமென்ட்! https://ift.tt/g4ZUIrz

இந்த வருடத்தின் பிரமாண்டமான இரண்டு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகின்றன. விஜய் நடித்து நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பீஸ்ட்' திரைபப்டம் ஏப்ரல் 13-ம் தேதியும் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் 'KGF-2' படம் ஏப்ரல் 14-ம் தேதியும் வெளியாகிறது. இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாவது வசூலில் எந்தவிதப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு இப்போது இருந்தே ரசிகர்கள் மத்தியில் எகிறத் தொடங்கிவிட்டது. இதனை இரண்டு படக்குழுவும் சாமர்த்தியமாக கையாண்டு வருகிறார்கள். நடிகர் யஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பில், "இது எலெக்ஷன் இல்லை. ஒரு ஓட்டு தான் போட முடியும் என்றில்லை. விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தையும் பாருங்கள். நானும் விஜய் படம் பார்ப்பேன்" என்று 'பீஸ்ட் vs KGF' கிடையாது, 'பீஸ்ட் மற்றும் KGF 2' என்று பேசினார்.

யஷ்

இயக்குனர் நெல்சன், KGF 2 ட்ரைலருக்கு பாராட்டு தெரிவித்து ட்வீட் செய்திருக்கிறார். அதனை பகிர்ந்து இருக்கும் KGF இயக்குனர் பிரசாந்த் நீல், " நன்றி நெல்சன், விஜய் சாரைப் பெரிய திரையில் பார்க்க எப்போதும் போலவே காத்திருக்கிறேன். ஆல் த பெஸ்ட் பீஸ்ட்" எனப் பதில் ட்வீட் செய்திருந்தார். பிரசாந்த் நீல் 'விஜயின் ரசிகர்' என்று குறிப்பிட்டதை ஆராய அவரது பழைய ட்வீட்களை ஆராய்ந்திருக்கிறார்கள் ரசிகர்கள். 'மாஸ்டர்', 'பிகில்' உள்ளிட்ட படங்களுக்கு அவர் பகிர்ந்த ட்வீட்டை ஷேர் செய்து, அடுத்து விஜய் உடன் படம் செய்யுமாறு கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/spIHarL
https://ift.tt/DC8hAwQ

Comments