கடந்த 15 மாதங்களில் தமிழகத்தில் 131 யானைகள் உயிரிழப்பு

கோவை: தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில் 131 யானைகள் உயிரிழந்துள்ளன என யானைகள் இறப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 2021 ஜன.1முதல் டிச.31 வரை 101 யானைகளும், 2022 ஜன.1 முதல் மார்ச் 15வரை 30 யானைகளும் உயிர்இழந்துள்ளன. இதில், அதிகபட்சமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் 20 யானைகள், கோவை வனக்கோட்டத்தில் 18 யானைகள் உயிரிழந்துள்ளன.

Comments