‘தேனீக்கள் ரீங்காரம்’ திட்டம் இருந்தும் - 2019-ம் ஆண்டில் இருந்து இதுவரை ரயிலில் அடிபட்டு 48 யானைகள் இறப்பு
புதுடெல்லி: வனப்பகுதிகளில் யானைகள் செல்லும் பாதைகளில் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதனால் ரயில்களில் அடிபட்டு யானைகள் தொடர்ந்து இறக்கின்றன. இதை தடுக்க, யானைகள் உள்ள பகுதிகளில் தண்டவாளங்கள் அருகே தேனீக்கள் ரீங்காரமிடும் ஒலியை வெளியிடும் கருவிகளை ரயில்வே பொருத்தியது. தேனீக்கள் ஒலி யானைகளுக்கு பிடிக்காது என்பதால் நாட்டின் பல பகுதிகளில் ‘பிளான் பீ’ என்ற பெயரில் இத்திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.
இதன் மூலம் அந்தக் கருவிகள் 600 மீட்டர் தூரம் வரை கேட்கும் அளவில் தேனீக்களின் ரீங்கார ஒலியை தொடர்ந்து எழுப்பும். அதை கேட்கும் யானைகள் தண்டவாளப் பகுதிக்கு வராமல் விலகிச் செல்லும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், இத்திட் டத்தை செயல்படுத்தியும் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து இதுவரை 48 யானைகள் ரயில்களில் அடிபட்டு இறந்துள்ளன.
Comments
Post a Comment