ஜப்பானில் சுமார் ஆயிரம் வால்டேஜ் மின்சாரத்தை கடத்தும் ரயில்வே உயரழுத்த மின்கம்பிகளில் ரோபோ ஒன்று பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது.
பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக கருதப்படும் ரயில்வே மின்கம்பிகளில் பணியாளர்கள் பராமரிப்பு மேற்கொள்வது என்பது சவாலானதாக அமைந்துள்ளது. இதனை எளிதுப்படுத்தும் வகையிலும் விரைவாகவும் இப்பணிகளை செய்துமுடிக்க ராட்சத கிரோன் மூலம் ரோபோ அனுப்பப்படுகிறது.
மனிதரின் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் இயக்கப்படும் VR வகை ரோபோ, மனிதர்களை போன்றே செயல்பட்டு மின்இனைப்பு கம்பிகளை பொருத்தி நுட்பமாக வேலையை செய்துமுடிகிறது. மூன்று பணியாளர்களின் வேலையை ஒரே ரோபோ செய்துமுடிப்பதாகவும், இத்திட்டம் விரைவில் விரிவுப்படுத்தப்படும் என்றும் ஜப்பான் நாட்டு ரயில்வே கூறியுள்ளது.
இதையும் படிக்க:எலான் மஸ்கின் அடுத்த 'டார்கெட்' கோகோ கோலா நிறுவனமா? சர்ச்சையை கிளப்பிய ட்விட்டர் பதிவு!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/rbINeXt
Comments
Post a Comment