நாமக்கல்: உயிரிழந்த ரசிகர்; கலங்கிய குடும்பத்தினருக்கு சூர்யா செய்த உதவி இதுதான்! https://ift.tt/cVZeNjv

நாமக்கல்லில் தனது ரசிகர் ஒருவர் சாலை விபத்தில் உயிழந்ததைக் கேள்விப்பட்ட நடிகர் சூர்யா, அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார் சூர்யா.

நாமக்கலை சேர்ந்தவர் ஜெகதீஷ். வயது 27. நடிகர் சூர்யா ரசிகர் மன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டச் செயலாளராக இருந்து வந்தார் ஜெகதீஷ். இவருக்கு திருமணம் ஆகி மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் லாரி ஒன்று அவரது பைக்கின்மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார். ஜெகதீசை சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

சூர்யா

அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டிற்கு நடிகர் சூர்யா சென்றிருக்கிறார். ஜெகதீஷின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். ஜெகதீஷிற்கு மனைவி ராதிகா, மற்றும; அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

ரசிகரின் வீட்டுக்கு சூர்யா சென்றது குறித்து சூர்யா ரசிகர் மன்ற நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் நரேஷிடம் பேசினோம். அவன் கூறிய தகவல் இதுதான்."சென்னையில் இருந்து சென்ற சூர்யா, நாமக்கலுக்கு ஏழு மணியளவில் வந்து சேர்ந்திருக்கிறார். ஜெகதீஷின் வீட்டிற்கு கிட்டத்தட்ட அரை மணிநேரம் செலவிட்டிருக்கிறார். பொதுவாக ரசிகர் யாரேனும் இதுபோல இறந்துவிட்டால், அவரின் குழந்தைகளுக்கு சூர்யா சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்படுவதுதான் சூர்யாவின் வழக்கம். இறந்துபோன ஜெகதீஷின் மனைவி படித்திருப்பதால், அவரது படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவும், குழந்தை இனியா விரும்பிய படிப்பிற்கு உதவுவதாகவும் சூர்யா உறுதியளித்திருக்கிறார். தவிர ஜெகதீஷின் குடும்பத்தைத் தொடர்ந்து கவனித்து தனக்கு தெரிவிக்குமாறு கூறியிருக்கிறார்'' என்றார்



from தமிழ் சினிமா https://ift.tt/js2EwHM
https://ift.tt/r7i6Tyu

Comments