`அழகுக்காக அவர்களைப்போல சர்ஜரி செய்ய விருப்பமில்லை!' - ராதிகா ஆப்தே https://ift.tt/obZpsaV

வயதாவதால் அழகு குறைவதை சமாளிக்க மேற்கொள்ளப்படும் ஆபரேஷன்களை செய்துகொள்பவர்கள் தன்னை சோர்வாக உணரவைக்கிறார்கள் என்று பிரபல நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.

பிரபல இந்திய நடிகையான ராதிகா ஆப்தே இந்தி, தமிழ், மராத்தி போன்ற மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் தயாராகி வரும் ’விக்ரம் வேதா’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ராதிகா, ஒரு செய்தி நிறுவன செய்தியாளரிடம் பேசியபோது, '`வயது ஆக ஆக என் தொழில்துறையில் உள்ள பல பிரபலங்களும் அழகுக்காக அறுவை சிகிசை செய்துகொள்கிறார்கள். தங்கள் முகத்தையும் உடலையும் மாற்றி அமைக்க பல அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட என் சகாக்கள் பலரை நான் அறிவேன். பாடி பாசிட்டிவிட்டி பற்றி பேசுபவர்கள்கூட இப்படி செய்கிறார்கள். வயதாவதால் அழகு குறைவதை சமாளிக்க மேற்கொள்ளப்படும் ஆபரேஷன்களை செய்துகொள்பவர்கள் என்னை சோர்வாக உணரவைக்கிறார்கள். அதை மிகவும் சவாலாகக் காண்கிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

ராதிகா ஆப்தே

மேலும் சமீபத்தில் ’புருட் இந்தியா’வுக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய ஆரம்பக் காலங்களில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தான் வேலை பார்த்ததாகவும், என்றாலும் அதனை கொண்டு நியாயமான, கண்ணியமான ஒரு வாழ்க்கையை வாழலாம் என்றும், அந்த நேரங்களில் அவர் மூன்று தோழிகளுடன் தங்கியிருந்ததாகவும், சில நேரங்களில் சோபாக்களில் கூட உறங்கியுள்ளதாகவும் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.



from தமிழ் சினிமா https://ift.tt/YO8rDeM
https://ift.tt/4VdTKNi

Comments