Vijay 66 அப்டேட்ஸ்: டபுள் ரோலில் நடிக்கிறாரா விஜய்? சென்னையில் மீண்டும் தொடங்கும் ஷூட்டிங்! https://ift.tt/slapzk4

விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் `விஜய் 66' படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. இந்த வாரத்தோடு அந்த ஷெட்யூல் ஷூட் நிறைவு பெறுகிறது.

நாகார்ஜூனா நடித்த 'தோழா' படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் துவங்கியது. ஃபேமிலி சென்டிமென்ட்டிற்கு முக்கியத்துவம் அளித்து உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஶ்ரீகாந்த், ஷாம், யோகிபாபு எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

பிரகாஷ்ராஜுடன் விஜய்

இதன் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் துவங்கியது. பிரகாஷ்ராஜ் உள்பட பலரின் காம்பினேஷன் சீன்களில் விஜய் நடித்து வந்தார். விஜய் இதில் இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் பேச்சு உள்ளது. ஹைதராபாத் ஷெட்யூலில் விஜய்யின் போர்ஷன் முடிந்துவிட, அவர் இரண்டு நாள்களுக்கு முன்னரே சென்னை புறப்பட்டு வந்துவிட்டார். இப்போது அங்கு இதர நடிகர்களின் காம்பினேஷனில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த வார கடைசியோடு இந்த ஷெட்யூலும் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் வருகிற ஜூன் மாதம் 3ம் தேதி நடக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். அங்கு மிகப்பெரிய வீடு செட் ஒன்றை அமைத்து வருகிறார்கள். இந்த ஷூட்டிங்கில் விஜய், ராஷ்மிகா பங்கேற்கிறார்கள். வருகிற ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாள் வருவதால் அன்று படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகலாம் என்கிறார்கள்.



from தமிழ் சினிமா https://ift.tt/dKoDbqN
https://ift.tt/8gyNGuw

Comments