Vikram சென்சார் ரிப்போர்ட்: `ஒன்றியத்தின் தப்பாலே'வைத் தொடர்ந்து படத்தில் `GST' தொடர்பான வசனம்? https://ift.tt/bUGcA2i

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகிய முன்னணி நடிகர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'விக்ரம்'. இத்திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் சென்சார் ரிப்போர்ட் குறித்தத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றில் 'GST' என்ற வார்த்தை, அதீத வன்முறை தொடர்பான ஷாட்கள் மற்றும் தகாத வார்த்தைகள் உட்பட பல விஷயங்கள் சென்சாரில் நீக்கப்பட்டுள்ளன.

அப்படி நீக்கப்பட்ட ஷாட்கள், ஒலிக்குறிப்புகள், வசனங்கள் குறித்த விவரங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவை இதோ...
Vikram - கமல்
  • முதல் ஹைலைட்டாக ஷாட் எண் 162 (ரீல் 2 - 44.35)-ல் இடம்பெற்ற 'GST' என்ற வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.

  • படத்தின் கதாநாயகன் நடுவிரலை காட்டும் காட்சி நீக்கப்பட்டுள்ளது.

  • விஜய் சேதுபதி தொடர்ந்து ஒருவரைத் தாக்கும் காட்சி, டிரெய்லரில் காண்பிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதன் நீளத்தைச் சற்றே குறைத்திருக்கிறார்கள்.

  • லூசு, சைக்கோ உள்ளிட்ட இன்னும் பல தகாத வார்தைகள் படத்தில் எங்கெல்லாம் இடம்பெற்றுள்ளனவோ அவை அனைத்தும் சத்தமில்லாமல் ம்யூட் செய்யப்பட்டுள்ளன.

  • கழுத்தை வெட்டும் காட்சி, கோரமாக அதிலிருந்து ரத்தம் வழியும் சில ஷாட்கள், கால்கள் துண்டாகும் காட்சி, தலை துண்டிக்கப்படும் காட்சி, வாயில் கத்தி இறங்குவது போல் இருக்கும் காட்சி என வன்முறை நிறைந்த நிறைய ஷாட்கள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

Vikram - கமல், லோகேஷ் கனகராஜ்
  • முக்கியமாக பாலியல் ரீதியான சில விஷயங்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின் பாலியல் பழக்க வழக்கத்தை விவரிக்கும் வசனம், அது தொடர்பான விசுவல்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆபாசமான முனகல்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இதனிடயே 'GST' என்ற வார்த்தைத் தூக்கப்பட்டது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஏற்கெனவே 'பத்தல பத்தல' பாடலில் 'ஒன்றியத்தின் தப்பாலே' என்ற வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகச் சர்ச்சைகள் கிளம்பின. ஒரு சிலர் அதை எதிர்த்த போதும், இணையத்தில் பெரும்பாலும் அதற்கு ஆதரவுக்குரல்களே வெளிப்பட்டன. தற்போது 'GST' என்ற வார்த்தைத் தூக்கப்பட்டிருப்பது ஏன் என்பதற்கான விடை, படத்தில் இடம்பெற்றிருக்கும் அந்த முழு வசனத்தையும் கேட்டாலே நமக்குப் புரியவரும்.



from தமிழ் சினிமா https://ift.tt/4NPlZd9
https://ift.tt/r7i6Tyu

Comments