சிரஞ்சீவி படத்தில் சல்மான் கான்; சல்மான் கான் படத்தில் ராம்சரண்! அசத்தல் கேமியோக்கள் https://ift.tt/KbwWaY6

'RRR' படத்திற்குப் பிறகு, இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், ராம் சரண். அது அவரின் 15-வது படம் மட்டுமல்ல, தயாரிப்பாளர் தில் ராஜுவின் 50வது படமும் கூட. மிக பிரமாண்டமாக படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் கதை, எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் ஸ்கிரிப்டில் பணியாற்றி இருக்கிறார். திரு ஒளிப்பதிவு, தமன் இசை, அன்பறிவ் ஸ்டன்ட்ஸ், ஜானி டான்ஸ் என ஒவ்வொரு க்ராஃப்டும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டு வருகிறது.

ஷங்கர் - ராம்சரண்

கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா என நடிகர்கள் நிறைந்திருக்கின்றனர். தேர்தல் அதிகாரியாக ராம் சரண் நடிக்கிறார். படத்தில் முக்கியமான ப்ளாஷ்பேக் போர்ஷன் ஒன்றும் இருக்கிறது. அதிலும் வேறொரு தோற்றத்தில் ராம் சரணே நடிக்கிறார். இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

இதனை முடித்துவிட்டு, 'ஜெர்ஸி' பட இயக்குநர் கெளதம் தின்னனூரியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார், ராம் சரண். இப்போது சல்மான் கான் நாயகனாக நடிக்கும் 'கபி ஈத் கபி தீவாளி' என்ற இந்தி படத்தில் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பூஜாவின் அண்ணனாக வெங்கடேஷ் நடிக்கிறார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு, வெங்கடேஷ் இந்தியில் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

'காட்ஃபாதர்' படப்பிடிப்பில் சல்மான் கான் - சிரஞ்ஜீவி

தற்போது, 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'காட்ஃபாதர்' படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்து முடித்திருக்கிறார், சல்மான். மோகன்ராஜா இயக்கிவரும் இப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் ஒரு பாடலுக்கு சிரஞ்சீவியுடன் இணைந்து நடனமும் ஆடியிருக்கிறாராம். அந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராஃபி செய்திருக்கிறார். பிரபுதேவா - சல்மான் கான் - சிரஞ்சீவி... இந்தப் பெயர்களில் இருந்தே அந்தப் பாடல் எப்படி இருக்கும் என்பதை உணர முடிகிறது. நிச்சயம், தியேட்டரில் ஃபையர் மோடில் இருப்பார்கள், அவர்களது ரசிகர்கள் என்பதில் சந்தேகமில்லை.



from தமிழ் சினிமா https://ift.tt/BwFIEHc
https://ift.tt/FtCfQDz

Comments