விக்கிப்பீடியா நிறுவனத்தின் “விக்கிமீடியா அறக்கட்டளை”க்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
கட்டற்ற கலைக்களஞ்சியமாக விக்கிபீடியா தொடர்ந்து இலவசமாக சேவை வழங்கி வரும் நிலையில், திறம்பட சேவையை இன்னும் வழங்குவதற்கு தனது வாடிக்கையாளர்களிடம் நன்கொடை கோரி வருகிறது. இதன் ஒரு முயற்சியாக அதை நிர்வகித்து வரும் விக்கிமீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிமீடியா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை துவக்கியது.
இந்த நிறுவனத்தில் முதல் வாடிக்கையாளராக “கூகுள்” இணைந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தேடுபொறியில் (Search Engine) விக்கிபீடியாவின் கட்டுரைகள் மற்றும் தொகுப்புகளை பயன்படுத்துவதற்காக விக்கிமீடியா எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு பணம் செலுத்த கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் எவ்வளவு தொகை கூகுள் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறித்து தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
"எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அணுகலையும் விரிவுபடுத்துவதற்கான எங்கள் இலக்குகளைத் தொடர விக்கிமீடியா அறக்கட்டளையை நாங்கள் நீண்ட காலமாக ஆதரித்து வருகிறோம்" என்று கூகுளின் டிம் பால்மர் கூறினார். ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் (AFP) உட்பட ஐரோப்பா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான செய்தி நிறுவனங்களுடன் கூகுள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் தற்போது அந்த வரிசையில் விக்கிபீடியாவும் இணைந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/YG67zKn
Comments
Post a Comment