வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதால் இஸ்ரோவிற்கு லாபம் ரூ.2,200 கோடி! https://ift.tt/oPlHhQW

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணுக்கு ஏவியதன் மூலம் வர்த்தக ரீதியாக 279 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அன்னிய செலாவணியை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஈட்டியுள்ளது.

மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 34 நாடுகளின் 345 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவியிருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் வர்த்தக ரீதியாக 279 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அன்னிய செலாவணி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ISRO: Significance, Launches, Projects, Updates and News

அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.2,200 கோடி அளவிற்கு அந்நிய செலாவணி கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். இந்த மாத துவக்கத்தில் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் ‘டிஎஸ்-இஓ’ உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/qFcspOL

Comments