Yuvan: ``நான் ரஜினியின் இந்தப் பாடலை கம்போஸ் செய்தபோதுதான் யுவன் பிறந்தார்" - மனம் திறந்த இளையராஜா https://ift.tt/rVY21oP

இன்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள். அதையொட்டி அவரின் தந்தை இளையராஜா யுவனை வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், ``ஆழியார் அணை கெஸ்ட் ஹவுஸில் பாடல் கம்போஸ் செய்வதற்காக அப்போது சென்றிருந்தேன். அப்போது நிறைய படங்களுக்கு அங்கு சென்று இசையமைப்பது வழக்கம்.

நான், இயக்குநர் மகேந்திரன், தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி மற்றும் வாத்தியக்காரர்களும் அங்கு பாடல் பதிவில் இருந்தோம். தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி கோயம்புத்தூரில் இந்து அங்கு வந்து சென்றார். அந்த சமயத்தில் கே.ஆர்.ஜி ஒருநாள் என்னிடம் வந்து `உங்களுக்கு பையன் பிறந்திருக்கிறார்' என்றார். என் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தப்போதுகூட நான் அவருக்கு உதவியாக இல்லாமல் பாடல் கம்போஸ் செய்துகொண்டிருந்தேன். ஆனால், என் மனைவி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு மகன் பிறந்திருக்கிறார் என தகவல் வந்த நேரத்தில் நான் கம்போஸ் செய்து கொண்டிருந்த பாடல் மகேந்திரன் இயக்கத்தில், ரஜினி காந்த் நடித்த `ஜானி' திரைப்படத்தின் `செனோ ரீட்டா ஐ லவ் யூ' என்கிற பாடல்" என தன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகூறி வீடியோ பதிவிட்டிருந்தார்.



from தமிழ் சினிமா https://ift.tt/qAgoNxK
https://ift.tt/A56pt4C

Comments