``உயிருக்கு உயிராகக் காதலித்தேன்; ஆனால்..." - தற்கொலை செய்துகொண்ட நடிகை https://ift.tt/dbj26OV

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மல்லிகை அவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பவுலின் என்கிற தீபா. தனியாக வசித்து வந்தவர் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது `வாய்தா' படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
நடிகை பவுலின்

இந்த நிலையில் நேற்று பிற்பகல் அவர் தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். தீபாவின் உறவினர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்று அவர் மொபைலை எடுக்காததால், தீபாவின் நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு பேசியபிறகு அவர் சென்று தீபாவின் வீட்டைப் பார்த்தபோதுதான் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

தீபாவின் சகோதரர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவருக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை பவுலின்

முதற்கட்ட விசாரணையில் நடிகை கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. `ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் காதல் கைக்கூடவில்லை.. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.



from தமிழ் சினிமா https://ift.tt/9kUZEcl
https://ift.tt/6fRKezN

Comments