Ponniyin Selvan: ``சிம்பு படத்துல நடிச்சா; நான் நடிக்க மாட்டேன்னா...!" - ஜெயம் ரவி விளக்கம் https://ift.tt/R8fq9hg
பல ஆண்டுகளாக பலருடைய கனவு திரைப்படமான, 'பொன்னியின் செல்வன்' தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் வெகு தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னை தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் நடிகை திரிஷா, இயக்குனர் மணி ரத்னம் ஆகியோர் பங்கேற்று பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் பார்த்திபன், "அனைவருக்கும் சின்ன வணக்கம், இந்தச் சின்ன என்ற சொல் ஏனென்றால் நான் இந்த திரைப்படத்தில் சின்ன கதாபாத்திரம் தான் செய்திருக்கிறேன்." என வழக்கம்போல் தனது அடுக்கு மொழி சொற்களால் அரங்கத்தையே கைதட்டல் ஒலிகளால் நிரம்பச் செய்தார்.

இந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ``பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக காலை 2 மணிக்கு எழுந்து மேக்கப் போட்டு விட்டு படப்பிடிப்பிற்கு செல்வோம் காலை 6:00 மணிக்கு படப்பிடிப்பு தளத்திற்குச் செல்வோம், இந்த வழக்கம் 50 நாட்கள் வரை தொடர்ந்தது.நான் இந்த திரைப்படத்தின் திரைகதையை படித்து விட்டு தான் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தேன், புத்தகத்தை படித்துவிட்டு படப்பிடிப்பிற்கு செல்லும்போது ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் காண ஆவலாக இருப்பேன்".
இதனை தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் ஜெயம் ரவியிடம், "சிம்பு இந்த திரைப்படத்தில் நடித்தால் நீங்கள் நடிக்க மாட்டேன் என்று கூறியதாக செய்திகள் வெளிவந்தது, அது உண்மையா" எனக் கேட்டார்.

இதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, ``இப்படி ஒரு தகவல் உலவியபோது சிம்புவே எனக்கு கால் செய்து, `நான் படத்துல இருக்கேன்னு தெரிஞ்சா சந்தோஷப்படுற முதல் ஆள் நீ தான், அதனால் இவர்கள் சொல்வதைப் பற்றி கவலை படாதே' என சிம்பு கூறியதாக, ஜெயம் ரவி கூறினார்.
from தமிழ் சினிமா https://ift.tt/iUEVwKg
https://ift.tt/cOJNou0
Comments
Post a Comment